கஞ்சா விற்ற முதியவர் கைது
போடியில் கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்
போடி:
போடி நகர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த முதியவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடமிருந்து பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர், போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 66) என்றும், அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.