மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

வருசநாட்டில் மனைவியை கத்தியால் குத்திய ெதாழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-13 15:57 GMT
கடமலைக்குண்டு:
தகராறு
வருசநாடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சபீனா (24). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜா தினமும் மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு ெசய்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் இன்று அவர் மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால் சபீனா கோபித்து கொண்டு அம்ேபத்கர் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு ெசன்று கொண்டிருந்தார்.
கத்திக்குத்து 
அப்போது அவரை பின்தொடர்ந்து ெசன்ற ராஜா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சபீனாவின் முதுகு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் குத்தினார். இதில் அவர் அங்ேகயே மயங்கி விழுந்தார். இதையடுத்து ராஜா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். 


பின்னர் அக்கம்பக்கத்தினர் சபீனாவை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சபீனா வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
மனைவியை கத்தியால் தொழிலாளி குத்திய சம்பவம் வருசநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்