மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
ஆம்பூர்
ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் கமால்பாஷா. இவரது மனைவி ஜியாத் (வயது 55). கணவன்- மனைவி இருவரும் சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறி ஜியாத் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.