கூடலூர் அருகே சந்தனமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 17 ந் தேதி தொடங்குகிறது

சந்தனமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது

Update: 2022-03-13 15:39 GMT
கூடலூர்

சந்தனமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது 

சந்தனமலை முருகன் கோவில்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சந்தனமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு கள் காரணமாக விழாக்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. 

இதையொட்டி காலை 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 7.30 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. 

ஊஞ்சல் உற்சவம்

இரவு 7 மணிக்கு பார்வுட் பசுவண்ணன் சிவன் கோவிலில் இருந்து ஸ்ரீ முருகன், வள்ளி- தெய்வானை தேர்கள் புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக கோவிலை வந்தடைகிறது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு ஊஞ்சல் உற்சவ சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 

18-ந் தேதி 6 மணிக்கு முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணி வரை விசேஷ பூஜைகள் நடக்கிறது. பின்னர் இன்னிசை கச்சேரி நடக்கிறது. 

மஞ்சள் நீராட்டு விழா

19-ந் தேதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பல்வேறு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். 

இதேபோல் விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்