காய்கறி வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
காய்கறி வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கோத்தகிரி
கோத்தகிரி மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றி வரும் வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைடுத்து இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் ஏற்றி வந்த வாகனங்களில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு இருந்த ஒரு வாகனத்தில் வாழைஇலை கட்டுக்குள் ஏராளமான புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அந்த வாகனத்தில் இருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கோத்தகிரி வள்ளுவர் காலனியை சேர்ந்த தவராஜா (வயது 42), கட்டபெட்டு செல்வபுரம் வெள்ளியங்கிரி (60), கோவை சிக்கதாசம் பாளையம் பரக்கத்துல்லா (42) ஆகியோர் என்பதும் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்ததுடன், அவர்கள் கடத்தி வந்த ரூ.9 ஆயிரம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.