பந்தலூர் அருகே சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பந்தலூர் அருகே சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி சாலை ஓரத்தில் குடிநீர்தொட்டி உள்ளது. இதன் அருகே ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
மழையின்போது சாலையின் ஓரத்தில் இருந்து மண் சரிந்து விழுந்ததில் பொதுமக்களின் வீடுகள் சேதம் அடைந்தது. எனவே அங்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இருந்து இங்கு பருவமழை பெய்ய தொடங்கி விடும் என்பதால் மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே அதற்குள் இந்த பகுதியில் சாைலயோரத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.