மராத்திய திரைப்பட இயக்குனர் ரங்கசாமியுடன் சந்திப்பு

மராத்திய திரைப்பட இயக்குனர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தார்

Update: 2022-03-13 14:44 GMT
புதுச்சேரி, மார்ச்.13-
மராத்திய திரைப்பட இயக்குனர் சச்சின் குண்டல்கர் என்பவர் புதுச்சேரியின் முக்கியமான சுற்றுலா தலங்களிலும், வணிக பகுதிகளிலும் செல்போன் மூலமாக பாண்டிச்சேரி என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் இன்று அண்ணா சாலையில் உள்ள ரத்னா தியேட்டரில் திரையிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து திரைப்பட இயக்குனர் சச்சின் குண்டல்கர் மற்றும் படக்குழுவினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, இயக்குனர் சச்சின் குண்டல்கரை பாராட்டி நினைவுபரிசு வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலாளர் நெடுஞ்செழியன், சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்