காட்பாடி சட்டக்கல்லூரி வளாகத்தில் திடீர் தீ விபத்து

காட்பாடி சட்டக்கல்லூரி வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-03-13 14:41 GMT
காட்பாடி

காட்பாடியில் அரசு வேலூர் சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது.  கல்லூரி விடுமுறை என்பதால் கல்லூரி மூடியிருந்தது. காவலாளிகள் மட்டும் காவலுக்கு இருந்தனர். கல்லூரி வளாகத்தில் இருந்த புல், செடி, கொடிகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த காவலாளிகள் காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்