திருவாலங்காடு கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருவாலங்காடு கோவிலில் குவிந்த பக்தர்கள் ஆர்வத்துடன் பரிகார பூஜையில் பங்கேற்கின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜ பெருமானின் ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தின சபையாகும். மாந்தி என்பவர் சனி பகவானின் மகன் என்பதால், சனிக்கிழமைகளில் பரிகார பூஜை நடக்கிறது. இந்த கோவிலில் உள்ள மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜென்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். திருமண தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும், கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும் என்பதால் பக்தர்கள் ஆர்வத்துடன் பரிகார பூஜையில் பங்கேற்கின்றனர்.
வாரந்தோறும் சனிக்கிழமை காலை 6½ மணி முதல் காலை 10½ மணி வரை நடைபெறும். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வந்து மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர்.