சாத்தான்குளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்
சாத்தான்குளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மாவட்ட உரிமையியல் நீதிபதி ரமேஷ் தலைமை வகித்து வழக்கு விசாரணை நடத்தினார். இதில் சிறு, குறு வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் குறித்த வழக்குகள் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பட்டியல் வழக்குரைஞராக ஜோஜெகதீஷ் செயல்பட்டார்.
ஏற்பாடுகளை சட்டப்படி குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதிமான ரமேஷ் தலைமையில் நீதிமன்ற பணியாளர்கள் சத்தியபாமா, ராஜேந்திரன், சண்முகசுந்தரி, சுப்புலட்சுமி, மகேந்திரன், ஆறுமுகம், வெஸ்லி பாண்டியம்மாள், சுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.