உடன்குடி பகுதியில் தென்னை மர கன்று விற்பனை அமோகம்
உடன்குடி பகுதியில் தென்னை மர கன்று விற்பனை அமோகமாக நடந்து வருகிறது;
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் இந்த வருடம் பருவமழை நன்றாக பெய்தது. இப்பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், கண்மாய்கள் முழுமையாக நிரம்பியது. நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்ததால், நிலங்களில் உவர்ப்பு தன்மை மாறியது. இதனால் விவசாயிகளும் கிராம மக்களும் தென்னங் கன்றுகளை ஆர்வத்துடன் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயிரிட்டு வருகின்றனர், இதனால் உடன்குடி பஜார் வீதிகளில் பல இடங்களில் தென்னங் கன்றுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு, விற்பனையும் தீவிரமாக நடந்து வருகிறது.