முகநூலில் பெண்ணுக்கு தொந்தரவு வாலிபர் கைது
திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த திருமணமான 25 வயது பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் முகநூல் மூலமாக அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த திருமணமான 25 வயது பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் முகநூல் மூலமாக அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த சிவாவயது 29 என்பதும், இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. மேலும் வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த பெண்ணை முகநூல் மூலமாக தொந்தரவு செய்ததாக சிவா போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.