கிரிப்டோகரன்சி முறையில் பணமோசடி செய்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி உள்பட 2 பேர் கைது

கிரிப்டோகரன்சி முறையில் பணமோசடி செய்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-13 13:19 GMT
கோப்பு படம்
புனே, 
புனேயை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து வந்தவர் ரவீந்திர பாட்டீல். இவர் விருப்ப ஓய்வு பெற்று சைபர் நிபுணராக பணியாற்ற தொடங்கினார். கடந்த 2018-ம் ஆண்டு 2 கிரிப்டோகரன்சி வழக்கு தொடர்பாக தத்தாவாடி, நிகாடி ஆகிய போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ரவீந்திர பாட்டீல் நடத்திய விசாரணையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து கிரிப்டோகரன்சி டிஜிட்டல் முறையில் மற்றொரு வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் சைபர் அதிகாரியாக இருந்து வரும் ரவீந்திர பாட்டீல் மற்றும் அவருடன் பணிபுரிந்து வந்த பங்கஜ் கோடே ஆகிய 2 பேர் தான் கோடிக்கணக்கிலான பணத்தை தங்கள் வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்து வந்தது தெரியவந்த்து. போலீசார் வழங்கிய தரவுகளை தங்கள் நலனுக்காக பயன்படுத்தி கிரிப்டோகரன்சியில் குறைவான தொகை காட்டும் ஸ்கீரின் ஷாட்டுகளை பங்கஜ் கோடே கையாண்டு பணமோசடி நடத்தி உள்ளார் என தெரியவந்தது. 
இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்