மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த அரிய வாய்ப்பு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாது:-

Update: 2022-03-13 13:03 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒன்றிணைத்து, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. அதனால், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, உற்பத்தியாளரின் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை மாவட்ட அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.இப்படி பதிவு செய்து கொண்டு அரசுத்துறைகள் மூலமாக நடைபெறும் விற்பனை கண்காட்சி மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் கோடைக்கொண்டாட்டம் கண்காட்சியில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்