இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை

இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை

Update: 2022-03-13 12:41 GMT
சமீப காலமாக பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாய நிலங்களில் வாடகைக்கு வீடு கட்டிவிடுவதால் சுற்றுச்சூழல் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக், கண்ணாடி உள்ளிட்ட கழிவுகளை விவசாய பூமி மற்றும் பொது இடங்களில் வீசி எறிகின்றனர்.இது விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தாக முடிகிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் வீடு கட்டி விடும் போது பெருமளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. கழிவுநீர் அளவுக்கதிகமாக நிலத்திற்குள் பாய்வதால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு, குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாததாக மாறும் அபாயம் உள்ளது.மேலும் வாடகைக்கு விடப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி, குடிநீர் மற்றும் தண்ணீர் எடுக்கின்றனர். விவசாயத்திற்காக அரசு இலவச மின்சாரம் வழங்குகிறது.மானியத்தில் வழங்கப்படும் மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது தவறானது.மின்வாரியம், விவசாய நிலங்களில் வாடகை வீடுகள் இருந்தால் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தி பணம் வசூலிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்