ஆதரவற்ற தொழிலாளி திடீர் சாவு

ஆதரவற்ற தொழிலாளி திடீர் சாவு

Update: 2022-03-13 12:11 GMT
ஆரணி

ஆரணி சார்பனார்பேட்டை பெருமாள் கோவில் தெருவில் சில வருடங்களாக ஆதரவின்றி பாபு (வயது 55) என்பவர் வசித்து வந்தார். 

அவர், ரிக்்ஷா தொழிலாளி ஆவார். அங்குள்ளவர்கள் கொடுக்கும் சிறு சிறு வேலைகளை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உணவு சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்த பாபு இன்று காலை திடீரென உயிரிழந்தார்.

இதையறிந்த அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் சேர்ந்து போதிமரம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் எரிவாயு தகன மேடையில் பாபுவின் உடலை  எரிக்க ஏற்பாடு செய்தனர்.

இதுபற்றி அவர்கள், ஆரணி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்கு போலீசார், ஆதரவற்றவர் என்பதை உறுதி செய்து நீங்களே அவரின் உடலை தகனம் செய்து விடுங்கள், என்றனர். அதன்ேபரில் பாபுவின் உடல் எரியூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்