அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

Update: 2022-03-13 12:08 GMT
ஆரணி

ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் நேற்று இரவு 7 மணி அளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். 

அப்போது அந்தவழியாகச் சென்ற அடையாளம் தெரியாத ஏதோ ஒரு வாகனம் அவர் மீது மோதி உளஅளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 இதுகுறித்து ஆகாரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்