சேத்துப்பட்டு அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேத்துப்பட்டு அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு அருகில் உள்ள தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவரின் மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். டிரைவரான மண்கண்டனுக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனது வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார்.
அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.