வாணியம்பாடியில் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் 194 வழக்குகள் மூலம் ரூ.3 கோடிக்கு தீர்வு

வாணியம்பாடியில் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் 194 வழக்குகள் மூலம் ரூ.3 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-03-13 11:50 GMT
வாணியம்பாடி

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் முதன்மை நீதிபதி மற்றும் நிரந்தர லோக் அதாலத் நீதிபதி வழிகாட்டுதலின்படி வாணியம்பாடியில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

அதில் நிலுைவயில் உள்ள வழக்குகள், சொத்து பிரச்சினை, விபத்து உள்பட 194 வழக்குகள் மூலம் ரூ.3 கோடியே 1 லட்சத்து 68 ஆயிரத்து 275-க்கு தீர்வு காணப்பட்டது. 
அதில் வாணியம்பாடி வட்ட சட்டப்பணிக
ள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான கே.ஆனந்தன், மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் எம்.காளிமுத்துவேல், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்