தூத்துக்குடி அருகே நாளை மறுநாள் மின்தடை ஏற்படும்இடங்கள்
தூத்துக்குடி அருகே நாளை மறுநாள் மின்தடை ஏற்படும்இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன
தூத்துக்குடி:
வாகைகுளம் துணை மின்நிலையத்தில் நாளைமறுநாள் (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேர்வைக்காரன் மடன், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், விமான நிலையம், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா தெரிவித்து உள்ளார்.