மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவமதிப்பீட்டு முகாம் நடந்தது. முகாமில் 200க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச ரெயில்பயணச்சீட்டு, பயணஅனுமதி கடிதம், இலவச பஸ் பாஸ் கான அனுமதி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, வட்டார கல்வி அலுவலர் சரவணன் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகாலட்சுமி மற்றும் பயிற்றுனர்கள் சிறப்பாசிரியர்கள் மருத்துவர்கள் பங்கேற்றனர்.