வாணியம்பாடி ரெயில்வே நடைமேம்பாலத்தைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வாணியம்பாடி ரெயில்வே நடைமேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி ரெயில்வே நடைமேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில்ேவ நடைமேம்பாலம்
வாணியம்பாடியில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் அருகருகே உள்ளன. ரெயில்கள் மூலமாக தொழிலாளர்கள் பலர் தனியார்இ அரசு நிறுவனங்களுக்கு வேலைக்கும், மாணவ-மாணவிகள் பலர் அரசு, தனியார் கல்லூரிகளுக்கும் படிக்கச் செல்கிறார்கள். தண்டவாளத்தைக் கடந்து செல்ல நடைமேம்பாலம் உள்ளது. அந்த நடைமேம்பாலம் பழுதடைந்ததால், ெரயில்வே நிர்வாகம் சரி செய்யாமல் காலதாமதம் செய்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தினமும் ெரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இதனால் விபத்துகள் நடப்பதாகவும், உயிர் பலி ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக கோவை, கேரள மாநிலத்துக்கும், பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கும் நாளொன்றுக்கு 120-க்கும் மேற்பட்ட ெரயில்கள் வாணியம்பாடியை கடந்து செல்கின்றன. வாணியம்பாடியை அடுத்த பெருமாள்பேட்டை கூட்ரோட்டில் இருந்து புதூர்கேட் வரை தண்டவாளத்தைக் கடக்க முயன்று 10-க்கும் மேற்பட்டோர் ரெயிலில் அடிபட்டு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ெரயில்வே நிர்வாகம் உடனடியாக நடைமேம்பாலத்தைச் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும், என்பது பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.