அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தக்கூடாது. ஆனால் சில பஸ்கள் மற்றும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பயன்படுத்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து புகாரின்பேரில் அவினாசி வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் சித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் அவினாசி புதிய பஸ் நிலையம் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். இதில் 15 வாகனங்களில் பெருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன் அகற்றப்பட்டது