யானை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி வீதி உலா

சிவகிரியில் பங்குனி உற்சவ தெப்பத்திருவிழாவை முன்னிட்டு யானை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி வீதி உலா வந்தார்.

Update: 2022-03-13 00:19 GMT
சிவகிரி:
சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உற்சவ தெப்பத் திருவிழா நடந்து வருகிறது. 4-ம் திருநாளான நேற்று காலை 8 மணியளவில் கூடாரப்பாறை கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ஏழாம் திருநாள் மண்டபத்தில் இருந்து முத்துக்குமார சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி, பவனி அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி யானை வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




மேலும் செய்திகள்