மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

Update: 2022-03-12 22:19 GMT
மைசூரு:
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் பெங்களூரு கோர்ட்டில் நடந்தது. இந்த விசாரணையில் சசிகலா, இளவரசி ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

பின்னர் சசிகலா மற்றும் இளவரசி அங்கிருந்து காரில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள நிமிஷாம்பா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னா் சசிகலா அங்கிருந்து மைசூருவுக்கு சென்றார். மைசூருவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்த அவர், நேற்று காலை சாமுண்டி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று, விசேஷ பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். 
சசிகலா, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் செல்போனில் படம் எடுத்து கொண்டனர். மேலும் சசிகலாவின் ஆதரவாளர்கள், ‘சின்னம்மா வாழ்க.. சின்னம்மா வாழ்க’ என கோஷமிட்டனர். பின்னர் சசிகலா அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். 

மேலும் செய்திகள்