முன்னாள் சார் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
முன்னாள் சார் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம், நாயக்கர்பாளையத்தை சேர்ந்த நீலமேகம்-கொளஞ்சி தம்பதியினர், குடும்ப தான தொகையினை பெறுவதற்கான பத்திரம் பெறுவதற்காக அரியலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அவர்கள், அதனை பெறுவதற்கு சென்றபோது, கடந்த 4.11.2015 அன்று சார்பதிவாளர் சுபேதார்கான்(வயது 60) ரூ.4,500 லஞ்சம் வாங்கியுள்ளார். அப்போது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் முன்னாள் சார் பதிவாளர் சுபேதார்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.