புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று ஒருவர் குணமாகியுள்ளார். தற்போது மாவட்டத்தில் அதே 4 பேர் மட்டுமே கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 39 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.