சாக்கடையில் விழுந்த சினைமாடு உயிருடன் மீட்பு

சாக்கடையில் விழுந்த சினைமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2022-03-12 21:26 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 8-வது குறுக்கு தெருவில் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டிக் கிடந்த பகுதியில் மாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன. அதில் ஒரு சினை மாடு எதிர்பாராதவிதமாக சாலையோர சாக்கடைக்குள் விழுந்தது. சாக்கடையில் அதிக அளவில் சேறு நிறைந்திருந்ததால், அதில் இருந்து மாடு வெளியே வர முடியாமல் தவித்தது. இதை பார்த்த பொதுமக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மாடு நிற்கும் இடத்தை அறிந்து அதற்கு நேராக உள்ள சிமெண்டு பலகைகளை அப்புறப்படுத்தி, மாட்டின் மீது கயிறு கட்டி சாக்கடைக்குள் இருந்து உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரான கரடிகுளம் புதுநகரை சேர்ந்த அன்பழகனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்