இடப்பிரச்சினையில் தந்தை- மகன் மீது வழக்கு
இடப்பிரச்சினையில் தந்தை- மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. அதே பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 65). இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக சுந்தரமூர்த்தி, ஜெயங்கொண்டம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், சம்பவத்தன்று பழனிச்சாமி, அவரது மகன் செல்வகுமார்(35) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சுந்தரமூர்த்தி தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பழனிச்சாமி, செல்வகுமார் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.