ஒரே நாளில் 3,465 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 3,465 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி, 24-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 3,465 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.