நாகர்கோவில் அருகே 10-ம் வகுப்பு மாணவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளி கைது

நாகர்கோவில் அருகே 10-ம் வகுப்பு மாணவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-12 20:42 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவில் அருகே 10-ம் வகுப்பு மாணவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
10-ம் வகுப்பு மாணவி
குமரி மாவட்டம் குளச்சல் ஆலஞ்சி பட்டுவிளையை ேசர்ந்தவர் ராேஜஷ் (வயது 25), கட்டிட தொழிலாளி. இவருக்கும் தென்காசி மாவட்டம் வி.கே.புரத்தை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவிக்கும் இடைேய பழக்கம் ஏற்பட்டது. வேலைக்காக ராேஜஷ் வி.கே.புரம் சென்ற போது இருவருக்கும் இடைேய சந்திப்பு ஏற்பட்டு பழக தொடங்கினர். ஆனால் இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 
இதைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை, ராேஜஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவியின் குடும்பத்தாருக்கு தெரிய வரவே, மாணவியை பெற்றோர் கண்டித்தனர். வீட்டை விட்டு வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.
மாணவி கடத்தல்
இந்தநிலையில் ராேஜஷ் திடீரென மாணவியை அழைத்து வந்து  வடக்கூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கு சுமார் 15 நாட்கள் வரை தங்கி இருந்தனர். இதற்கிடையே ‘தனது மகளை காணவில்லை’ என்று  வி.கே.புரம் போலீசில் புகார் அளித்தனர். உடனே வி.கே.புரம் போலீசார் ஆரல்வாய்மொழிக்கு வந்து மாணவியை மீட்டு சென்றனர்.
ஆனால் சில நாட்களிலேயே ராேஜஷ் மீண்டும் மாணவியை அழைத்து வந்து ஆரல்வாய்மொழி தெற்கூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளாா். இந்த நிலையில் தன் மகளை ராேஜஷ் கடத்தி சென்றதாக மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 
கைது
அதன்பேரில் ராேஜஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 
அதே சமயத்தில் மாணவியை போலீசார் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்