மோட்டர் சைக்கிளில் தீ
விருதுநகர் அருகே மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள மெட்டுக்குண்டு கிராமத்தில் வசிப்பவர் ஜோதிமுருகன் (வயது 52). இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றார். பின்னர் நள்ளிரவில் சத்தம் கேட்டதால் அவர் வெளியே வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக குடும்பத்தினர் உதவியுடன் தீயைஅணைத்தார். ஆனாலும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.