மக்கள் நீதிமன்றம்
அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மெகா மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்னிலையில் மொத்தம் 338 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
பல்வகை வழக்குகளில் மொத்தம் ரூ.50 லட்சத்து 51 ஆயிரத்து 646 வரை தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி வழக்கறிஞர் சங்க தலைவர் குருசாமி, மூத்த வழக்கறிஞர் விஜயரங்கன், பொருளாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.