பள்ளி மாணவன்-ஆசிரியை மாயம்

துறையூரில் பள்ளி மாணவன் மாயமான தேதியில் இருந்து ஆசிரியையும் காணாமல் போனது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-12 19:39 GMT
துறையூர், மார்ச்.13-
துறையூரில் பள்ளி மாணவன் மாயமான தேதியில் இருந்து ஆசிரியையும் காணாமல் போனது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
11-ம் வகுப்பு மாணவன்
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பள்ளிக்கு சென்ற அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த  குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மாணவனின் குடும்பத்தினர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.
ஆசிரியையும் மாயம்
இந்நிலையில் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவரையும் மாணவன் மாயமான தேதியில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவன் மாயமான சம்பவத்துக்கும், ஆசிரியை காணாமல் போன சம்பவத்திற்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்