பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்றது
காளையார்கோவில்,
காளையார்கோவில் 3ஒன்றியத்திற்குட்பட்ட மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் முத்துதுரை தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சிவசங்கரி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு மாவட்ட கருத்தாளர் ஆரோக்கியசாமி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், உள்ளூர் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன், ஜேம்ஸ் ஆசிரியர் ராஜசேகர் ஆகியோர் நன்றி கூறினர்.