மாவட்டத்தில் 25 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி

மாவட்டத்தில் 25 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2022-03-12 19:33 GMT
திருச்சி, மார்ச்.13-
தமிழகத்தில்  24-வது சுற்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 283 முகாம்களும், நகர்ப்புற பகுதியில் 200 முகாம்களும் என 483 முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. நேற்று காலை 9 மணி முதல் நடைபெற்ற முகாம்களில் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்டு முதல் தவணை செலுத்திக் கொண்ட 1,916 பேரும், 2-வது தவணை செலுத்தி கொண்ட 20,087 பேரும், முன்னெச்சரிக்கை தவணை செலுத்தி கொண்ட 272 பேரும், கோவேக்சின் முதல் தவணை செலுத்தி கொண்ட 409 பேரும், 2-வது தவணை செலுத்தி கொண்ட 2,698 பேரும், முன்னெச்சரிக்கை தவணை செலுத்தி கொண்ட 18 பேரும் அடங்குவர். இந்த தகவலை கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்