மதுரை,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம் நவீனப்படுத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தநிலையில், பெரியார் பஸ் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திருமங்கலத்தில் இருந்து பெரியார் வந்த அரசு பஸ் அந்த மூதாட்டி மீது மோதியது. இதில் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மூதாட்டியின் கையில் ஒரு பை மட்டுமே இருந்தது. அதில் தண்ணீர் பாட்டிலை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.