பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இளையான்குடியில் இன்று நடக்கிறது.
இளையான்குடி,
சிவகங்கை மாவட்ட மகளிர் திட்டம், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் சென்னை புளூ ஓசன் பர்சனல் அன் ஆலாய்டு சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடத்துகின்றன. இந்த முகாம் இளையான்குடி டாக்டர் சாகிர்உசேன் கல்லூரியில் நடக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நடக்கிறது. இதில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். கல்வி தகுதி பிளஸ்-2 முதல், அனைத்து பட்டப்படிப்பு, டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்த பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் பெண்கள் கல்வி சான்றிதழ் (அசல் மற்றும் நகல்) ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் பங்கு பெறலாம்.