கொரோனா தடுப்பூசி முகாம்

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;

Update: 2022-03-12 19:18 GMT
நொய்யல், 
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணி பாளையம், நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், மூர்த்தி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டனர். மேலும் மருத்துவ குழுவினர் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.

மேலும் செய்திகள்