‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி; கட்டிட கழிவுகள் அகற்றம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காரணமாக சாலையோரத்தில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டன.

Update: 2022-03-12 19:15 GMT
நொய்யல், 
நொய்யல்-வேலாயுதம்பாளையம் நெடுஞ்சாலையில் நடையனூர் அருகே தார் சாலையோரத்தில் கட்டிடக்கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. பலத்த காற்று வீசும்போது கட்டிட துகள்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நடையனூரிலிருந்து இளங்கோ நகர் வரை சாலை நெடுகிலும் கொட்டப்பட்டிருந்த கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுகளை உள்ளாட்சி துறை நிர்வாகத்தினர் அகற்றி அந்த இடத்தில் செடிகளை நட்டு வைத்து உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்