தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 4,824 வழக்குகளுக்கு தீர்வு
திருச்சி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 4,824 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.30 கோடியே 66 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டது.
திருச்சி, மார்ச்.13-
திருச்சி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 4,824 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.30 கோடியே 66 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் வழிகாட்டுதல்படி, திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று திருச்சி மாவட்டத்தில் நடந்தது. திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில், மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான கே.பாபு தொடங்கி வைத்தார். திருச்சி குற்றவியல் வக்கீல்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வரவேற்றார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே.விவேகானந்தன் முன்னிலை வகித்து பேசினார்.
மேலும் 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கே.ஜெயக்குமார், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பி. தங்கவேல், சிறப்பு மாவட்ட நீதிபதி (மோட்டார் வாகன விபத்து வழக்குகள்) கருணாநிதி, தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி சாந்தி, திருச்சி வக்கீல் சங்க தலைவர் ரமேஷ் நடராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் முதலாவது ஜூடிசியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கார்த்திக் ஆசாத் நன்றி கூறினார்.
காசோலை வழங்கிய நீதிபதி
முதல் வழக்காக தொழிலாளர் இழப்பீடு கோர்ட்டில் நிலுவையில் இருந்த விபத்து வழக்கு எடுக்கப்பட்டது. அரியமங்கலம் உக்கடம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேட்டு முகமது என்பவரின் மனைவி பர்வீன் பேகம் (வயது 35). இவர், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி பழைய பால்பண்ணை அருகில் சிமெண்டு கடையில் வேலை செய்தார்.அப்போது விபத்து ஏற்பட்டு பர்வீன் பேகத்தின் இடது கை மணிக்கட்டு முறிந்தது. அதற்கு நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் கேட்டு தொழிலாளர் இழப்பீடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட பர்வீன் பேகத்திற்கு ரூ.55 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க சமரச தீர்வு காணப்பட்டது. அதற்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.
ரூ.30 கோடியே 66 லட்சம் பட்டுவாடா
தொடர்ந்து திருச்சி கோர்ட்டில் 8 அமர்வுகளாகவும், முசிறி, துறையூர் கோர்ட்டில் தலா 2 அமர்வுகளாகவும், லால்குடி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் ஆகிய கோர்ட்டுகளில் தலா ஒரு அமர்வுகளாகவும் என மொத்தம் 15 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் மாலை வரை நடந்தது.கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி, ஜீவனாம்ச வழக்கு, நஷ்டஈடு வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, வங்கி வராக்கடன், குடிநீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட 8,775 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அவற்றில் 4,824 வழக்குகளுக்கு இருதரப்பினரிடையே பேசி ரூ.30 கோடியே 66 லட்சத்து 10 ஆயிரத்து 558 மக்கள் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது. பின்னர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.