நர்சு வீட்டில் தங்க நகை திருட்டு
பளுகல் அருகே நர்சு வீட்டில் தங்க நகை திருட்டு போனது
களியக்காவிளை:
பளுகல் அருகே நர்சு வீட்டில் தங்க நகை திருட்டு போனது.
பளுகல் அருகே உள்ள செறுவல்லூர் மத்தம்பாலையை சேர்ந்தவர் மெரினா மேரி. இவர் திருவாரூரில் நர்சாக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற அவருடைய சகோதரி ஜெயினி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. உடனே அவர் சகோதரர் ராபர்ட் சிசிலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து உள்ளே சென்று பார்த்த போது 7 கிராம் எடையுள்ள 3 மோதிரங்களை காணவில்லை. வீட்டின் கதவை யாரோ உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பளுகல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.