விஷம் குடித்த முதியவர் சாவு

மணல்மேடு அருகே விஷம் குடித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-12 18:52 GMT
மணல்மேடு:
மணல்மேடு அருகே பருத்திக்குடி பெரிய தெருவை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 60). கூலித் தொழிலாளி இவர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக சம்பவத்தன்று ஏற்பட்ட வயிற்று வலியால் அவர் வீட்டில் வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குதித்துவிட்டார்.
    உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விசுவநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்