தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,228 வழக்குகளுக்கு தீர்வு
கரூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,228 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கரூர்,
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தேசிய மக்கள் நீதி மன்றத்தை தொடங்கி வைத்தார். இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத அனைத்து வங்கி கடன், நிதி நிறுவன கடன்கள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கிக்கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,228 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், ரூ.25 கோடியே 43 லட்சத்து 29 ஆயிரத்து 256 இழப்பீடு தொகை உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.