மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
சீர்காழி வட்டார பகுதிகளில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜெ.சேகர், சீர்காழி வட்டாரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து மங்கைமடம் கிராமத்தில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் பருத்தி வயலில் உளுந்து ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டிருந்ததை பார்வையிட்டார். பின்னர் மருவத்தூர் கிராமத்தில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் வரப்பு உளுந்து சாகுபடியினை பார்வையிட்டார். புங்கனூர் கிராமத்தில் டிரோன் மூலம் பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி. மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்ததை பார்வையிட்டார். இறுதியாக திருவாலி கிராமத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட வயலினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராமச்சந்திரன், விஜய் அமிர்தராஜ், வேதையராஜன், ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.