கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவரங்குளம்:
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், சூத்தியன் காட்டில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு சிகிச்சை, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளை பொதுமக்கள் கொண்டு வந்து சிகிச்சை அளித்து சென்றனர்.