பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம், கட்டையாண்டிபட்டி மற்றும் கண்டியாநத்தம் ஊராட்சி, பொன்னமராவதி பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக அரசின் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தும் முகாமில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசியினை செலுத்தி கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் செய்திருந்தனர்.