லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது
ஜோலார்பேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், அரசு மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புது ஓட்டல் தெரு, சந்தைக்கோடியூர் உள்ளிட்ட இடங்களில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள மாநிலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது லாட்டரி சீட்டுகளை விற்ற சின்னகம்பியம்பட்டு தாசீர் வட்டத்தை சேர்ந்த சங்கர் (வயது 59), புறாகிழவன் வட்டத்தை சேர்ந்த சக்கரவர்த்தி (51), இடையம்பட்டி பாபுராவ் தெருவை சேர்ந்த சாதிக்பாஷா (39), பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் சேர்ந்த ஆரோன்டேவீட் (54), வக்கணம்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்த சேகர் (53) ஆகிய 5 பேரை பிடித்தனர்.
இதையடுத்து சங்கர் உள்பட 4 பேரை போலீசார் கைதுசெய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் சேகர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.