கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

Update: 2022-03-12 17:59 GMT
கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த மேல் காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் எம்.கோவிந்தன், விவசாயி. 

இவர், தனது நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். கரும்பு தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது. இன்று இரவு கரும்புத்தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த காவனூர் கிராம இளைஞர்களும், பொதுமக்களும் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். 

மேலும் குடியாத்தம் தீயணைப்புப்படை வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

அதில் ஒரு ஏக்கருக்குமேல் கரும்பு முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. அதில் மீதம் 50 சென்ட் பரப்பில் கரும்பு எரியவில்லை. 

இவருடைய நிலம் இதற்கு முன்பு இதேபோல இரண்டு முறை தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்