ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

கூழையார் கடல் பகுதியில் ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-03-12 17:35 GMT
கொள்ளிடம்:
கூழையார் கடல் பகுதியில் ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.
ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள்
கொள்ளிடம் அருகே சீர்காழி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூழையார் கடற்கரையோர பகுதியில் கடல் ஆமை முட்டை பொறிப்பகம் உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஆலிவர் ரெட்லி கடல் ஆமைகள், கடற்கரை ஓரங்களில் முட்டையிட்டு செல்வது வழக்கம். இந்த முட்டைகளை நாய்கள், நரி மற்றும் மனிதர்களிடம் இருந்து வனத்துறை மூலம் பாதுகாக்கப்படுகிறது.
தற்போது 32 ஆயிரம் கடல் ஆமை முட்டைகள் சேகரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இவை 45 முதல் 50 நாட்களுக்குள் சீரான வெப்பநிலையில் முட்டைகள் பொறித்து ஆமைக் குஞ்சுகள் வெளியே வரும். இவை கடற்கரையில் விடப்பட்டு அழிந்து வரும் கடல் ஆமைகள் வனத்துறை மூலம் பாதுகாக்கப்படுகிறது. 
350 ஆண்டுகள் உயிர் வாழும்
கூழையார் பள்ளி மாணவ -மாணவிகளுடன் மகளிர்களின் முன்னிலையில் வன உயிரின காப்பாளர் யாகேஷ்குமார் மீனா, ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த கடல் ஆமைகள் மீன்களின் பெருக்கத்திற்கும், கடலில் தேவையில்லாத கடல் பாசிகளை சாப்பிட்டும் கடல்வாழ் உயிரினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது.
 கடலில் விடப்படும் இந்த ஆமை குஞ்சுகள் 5 வருடங்கள் கழித்து திரும்பவும் இதே கடற்கரை பகுதிக்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்து முட்டைகள் இடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடல் ஆமைகள் 150 ஆண்டுகள் முதல் 350 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மையுடையது.

மேலும் செய்திகள்